திட்டம் பற்றி
“உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு அளித்த தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலைகளை ஆவணப்படுத்தும் உலகளாவிய முயற்சி”
திட்டத்தின் நோக்கம்
உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், மனிதகுலத்தின் நல்வழிகாட்டியாகவும் விளங்கும் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலைகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், உலகின் 19-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளன.
இச்சிலைகள் அமைந்துள்ள இடங்களை ஒருங்கே திரட்டி, அவற்றின் துல்லியமான வரைபட அமைவிடம் (GPS Coordinates), நிறுவப்பட்ட ஆண்டு, வரலாற்றுப் பின்னணி மற்றும் Google Maps வழிகாட்டல்களை அனைவரும் எளிய முறையில் பெற்றுச் சென்றடையும் நோக்குடன் இந்த உலகளாவிய திறந்தநிலை வழிகாட்டி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு மற்றும் திருத்தங்கள்
தங்கள் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் தகவல் திருத்தங்கள் இருந்தாலோ, தாராளமாக எங்களுக்குத் தெரிவிக்கலாம்.